Posted by: Anton | April 5, 2012

வால்பேப்பர்

வால்பேப்பர் மீது சொடுகுவதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

free wallpaper

free wallpaper

free wallpaper

Posted by: Anton | March 25, 2012

தாய் அன்பு

 சீன பூகம்பத்தின்போது ஒர் தாய் செய்த தியாகத்தைக் கூறும் உண்மைக் கதை.

love of mother - தாய் அன்பு

பூகம்பதின் ஆக்ரோசம் குறைந்ததும், ஓர் இளம் பெண்னின் வீட்டை அடைந்த மீட்புப் பணியாளர்கள் சிதைவுகளினுள்ளே அகப்பட்டுக் கிடந்த ஒர் உடலைக் கண்டனர். ஆனால் அந்த  உடல் கிடந்த முறை வித்தியாசமாயிருந்தது. சிரமங்களின் மத்தியில் அக் குழுவின் தலைவன் உடலை பரிசோதித்து உயிர் உள்ளதா எனப் பார்த்தார். ஆனால், அப் பெண் உயிரை ஏற்கெனவே விட்டுவிட்டிருந்தாள்.

மீட்புப் பணியாளர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு ஏனைய வீடுகளிலும் மீட்புப் பணியைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஓர் ஊந்துதலினால் அக் குழுவின் தலைவன் அந்த வீட்டுக்கு மீண்டும் வந்தான். உயிரற்ற உடலை கீழே தெரிந்த இடவெளியை பரிசோதித்த அவன் ‘குழந்தை, இங்கே ஒரு குழந்தை’ என சத்தமிட்டான்.

முழு மீட்புப் பணியாளர்களும் ஒன்றாக இணைந்து சிதைவுகளை அகற்றினர். அந்த உயிரற்ற உடல் தடித்த துணியினால் சுற்றப்பட்ட மூன்று மாத குழந்தையை பாதுகாத்தவாறு இருந்தது. உண்மையில் அத் தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க ஓர் தியாகத்தை செய்திருந்தாள். வீடு உடையத் தொடங்கியதும், தன் உடலை கவசமாகப் பயன்படுத்தி குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறாள்.

குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர், அக்குழந்தையின் போர்வையில் ஓர் செல்லிடத்தொலைபேசியைக் காண்டார்கள். அதன் திரையில் ஓர் செய்தி இவ்வாறு இருந்தது. நீ உயிர் தப்பினால், ஒன்றை நினைத்துக் கொள். அதாவது நான் உன்னை அன்பு செய்கிறேன்.

Posted by: Anton | February 13, 2012

காதலர் தினம்

Book Heart

புனித வலன்டைன் தினம் (காதலர் தினம்) பெப்ரவரி 14 அன்று இரத்த சாட்சியாக மரித்த கிறிஸ்தவ பாதிரியார் புனித வலன்டைன் கௌரவிக்கும் முகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் கி.பி. 496இல் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 1969 இல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

Green Heart

இந்நாளில் காதலை, அன்பை தெரிவித்துக் கொள்வது வழக்கமான ஒன்று. அதற்காக வாழ்த்து அட்டைகள், மலர்கள், இனிப்புகள் போன்றவை பரிமாறப்படுகிறன. இவற்றில் இதய வடிவ பொருட்கள், ஜோடிப் புறாச் சின்னம், மன்மதன் உருவங்கள், சிவப்பு ரோஜா என்பன குறிப்பிடத்தக்கவை.

Metal Heart

1784 ம் ஆண்டில் உருவாகிய காதலர் தினம் கவிதை:

ரோஜா சிவப்பு, வயலட் மலர் நீலம்
தேன் இனிமை, நீயும் இனிமை
நீயே என் காதல், நானோ உன்னுடையவன்
என் வலன்டைனாக உன்னை வரைந்தேன்
அனேக பிரயாசத்தின் பின் உன்னை வரைந்தேன்
அதிஸ்டம் சொல்லியது இது நீயோகவே இருக்க வேண்டுமென்று…

Smoking Heart

இது மேற்கத்திய கொண்டாட்டமாக கருதப்படுகின்றபோதும் உலகில் பல இடங்களில் இத்தினம் கொண்டாப்படுகிறது. இது சுதேச (கீழைத்தேய) பண்பாட்டுக்கு பொருத்தமற்றது என்றும் இது ஒரு வணிக நோக்கமுடையது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையான அன்பிற்கோ அல்லது காதலுக்கோ குறிப்பிட்ட நாள் மாத்திரமல்ல, ஒவ்வொரு நாளுமே காதலர் தினமே என்பதே யதார்த்தம்!

Posted by: Anton | January 15, 2012

குப்பை வண்டி விதி

garbage truck

வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி விமான நிலைத்திலிருந்து என்னுடைய இடத்திற்கு போயக் கொண்டிருந்தேன். நான் பயனித்துக் கொண்டிருந்தபோது கருப்பு நிற வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக நான் பயனித்த வாகனத்தின் குறுக்கே வந்தது. நான் பயனித்த வாகன ஓட்டுனர் மிகத் திறமையாக செயற்பட்டு ஒரு சில அங்குலங்களில் பேராபத்தை தவிர்த்துவிட்டார்.

பிழையாக குறுக்கே வந்த அந்த கருப்பு நிற வாகன ஓட்டுனர் எங்களை திட்டித் தீர்த்தார். நான் பயனித்த வாகன ஓட்டுனரோ அவரைப் பார்த்து புன்னகைத்து கையசைத்து விடை கொடுத்தார். அவரின் அணுகுமுறையில் ஆச்சரியமடைந்த நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள்? நம் இருவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பும் விதமாக அல்லவா அவர் வாகனம் ஓட்டினார்!’

‘குப்பை வண்டி விதி’ இதைத்தான் அந்த ஓட்டுனர் அன்று எனக்கு கற்றுத்தந்தார்.

அநேகமானோர் குப்பை வண்டிகள் மாதிரி. அவர்கள் மனச்சோர்வு, கோபம், விரக்தி போன்ற குப்பைகளால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். குப்பை குவியலாகியதும், அதை கொட்டிவிட அவர்களுக்கு ஓர் இடம் தேவை. சிலவேளை அந்த இடம் நீங்களாகக்கூட இருக்கலாம். இதை தனிப்பட்ட ஒன்றாக எடுக்காதீர்கள். மாறாக புன்னகைத்து, வாழ்த்தி, விடை கொடுங்கள். அவர்கள் குப்பையை எடுத்து மற்றவர்கள் மீது வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ, தெருவிலோ கொட்டிவிடாதீர்கள்.

அடிப்படை என்னவென்றால் வெற்றியடைந்தவர்கள் குப்பை வண்டி தங்கள் நாளை கெடுக்க விடமாட்டார்கள்.

10 வீதமான வாழ்வு நீங்கள் அதை எப்படி உருவாக்குகின்றீர்கள் என்பதிலும்
90 வீதமான வாழ்வு நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதிலும்தான் உள்ளது.

மேலும் வாசிக்க: 90/10 கொள்கை

 
Thanks to unknown author; received this law from a friend via email.

soldier carrying fallen comrade

தனது நீண்ட நாள் நண்பன் யுத்தக் களத்தில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்த உலக மகா யுத்தம் – 1 இல் பங்கு பற்றிய படைவீரனின் இதயம் திகிலால் சூழ்ந்து கொண்டது. அந்தப் படைவீரன், வீழ்ந்துகிடக்கும் தன் நண்பனை எடுத்துக் கொண்டுவர தன் மேலதிகாரியிடம் அனுமதி கேட்டான்.

‘நீ போகலாம்’ என மறுமொழியளித்த மேலதிகாரி ‘ஆனால், இது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

உன் நண்பன் ஏறக்குறைய செத்துவிட்டான். நீ கூட அங்கே போவதால் உன் உயிரைவிடலாம்.’

மேலதிகாரி சொற்கள் அந்தப் படைவீரனுக்கு ஓர் விடயமாகப்படவில்லை அவன் சென்றுவிட்டான்.

அற்புதமாக, அவன் நண்பன் இருந்த இடத்திற்கு போய் சேர்ந்துவிட்டான். தோளில் தன் நண்பனை தூக்கிப்போட்டவாறு தன் படைப் பிரிவின் பதுங்கு குழியை வந்தடைந்தான். மேலதிகாரி, காயப்பட்டிருந்த வீரனை பரிசோதித்துவிட்டு, பரிவோடு அந்தப் படைவீரனை பார்த்தார்.

‘நான் உனக்கு முன்பே கூறினேன் இது பயனுள்ளதாக இருக்காதென்று’ என்று கூறிய அவர் ‘உன் நண்பனும் இறந்துவிட்டான் நீயும் மிகமிக மோசமாக காயப்பட்டிருக்கிறாய்.’

‘இது பயனுள்ளது, ஐயா’, பதிலளித்தான் படைவீரன்.

‘பயனுள்ளது என்பதை நீ எப்படி அர்த்தப்படுத்துகிறாய்?’ எனக் கேட்ட அந்த அதிகாரி ‘உன் நண்பனோ இறந்துவிட்டான்’ என்றார்.

‘ஆம் ஐயா’ பதிலளித்த படைவீரன்…

‘ஆனால் இது பயனுள்ளது ஏனென்றால், நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது அவன் உயிருடன் இருந்தான். ‘ஜிம்… நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்.’ என்ற என் நண்பனின் வார்த்தைகள் எனக்குத் திருப்பியானவை.’

வாழ்க்கையில் பல தடவைகளில், நாம் பார்க்கும் பார்வையில்தான் பயனுள்ளது என்பதும் பயனற்றது என்பதும் தங்கியுள்ளது. உன்னிடமுள்ள எல்லா உற்சாகத்தையும் எடுத்துக் கொண்டு உன் இதயம் உனக்குச் சொல்வதைச் செய். பின்பு உன் வாழ்நாளில் அதைச் செய்யவில்லையே என வருந்தாமலிருக்கலாம்.

Posted by: Anton | December 1, 2011

பொன்மொழிகள் பத்து

1. நாக்கிற்கு எலும்புகள் கிடையாது, ஆனால் அது பலரது எலும்புகளை நொறுக்குகிறது. ~ ஹட்டி~

 

2. ஆற்றில் விழுகின்ற மழைத்துளிகள் தண்ணீரில் கலந்துவிடுவது போல, எந்த இன்பமும் அனுபவித்தவுடன் தீர்ந்துவிடுகின்றது.  ~யாரோ~

 

3. இன்பத்தின் இரகசியம், நீ விரும்புவதை செய்வதில் அல்ல, நீ செய்வதை விரும்புவதுதான். ~ஜேம்ஸ் எம். பெர்ரி~

 

4. மனதில் பொங்கும் கோபத்தை அடக்கப் பயின்றுவிட்டால், மற்ற நற்குணங்கள் எல்லாம் தாமாக வந்து சேரும். ~டோல்ஸ்டாய்~

 

5. பெறத்தக்க பேறுகளில் எல்லாம் மேலான பேறு ஒழுக்கத்தைப் பெற்று இருப்பதுதான். ~ரூஸோ~

 

6. நீதியானது அரக்கனைக்கூட தவறாக தண்டித்துவிடக் கூடாது. ~எடிஸன்~

 

7. எந்தப் பழக்கமும் முதலில் சிலந்தி வலை போன்று இருக்கும். அதுவே நாளடைவில் இரும்புச் சங்கிலிபோல உறுதியானதாக மாறிவிடும்.  ~எட்வர்ட்ஸ்~ 

 

8. ரோஜாச் செடியில் முள் இருக்கிறதென்று முறையிடாதே! முட்செடியில் மலர் உள்ளதென்று மகிழ்வாயாக. ~ஆவ்பரி ஜேம்ஸ்~

 

9. ஒருவன் நேசிக்கின்ற புத்தகங்களை எனக்குக் காட்டுங்கள். அவனுடைய நண்பர்கள் மூலம் அவனைப் பற்றி அறிந்து கொள்வதைக் காட்டிலும், அந்தப் புத்தகங்கள் மூலம் அவனைப்பற்றி நன்றாக அறிந்து கொள்கிறேன். ~வியர் மிட்செல்~

 

10. ஒருவனது நாவு சீர் பெறாத வரை, அவனுடைய இதயம் சீர் பெறாது. ~நபி ஸல்~

Posted by: Anton | November 6, 2011

இரத்தம்

7 வீதமான மனித எடை இரத்தத்தினால் ஆனது.7% of blood

ஒவ்வொரு நாளும் 4 கலன் இரத்தம் சிறுநீரகத்தினால் சுத்தம் செய்யப்படுகிறது. kidney 4 galon

பெண்களின் உடலில் 4.5 லீட்டர் இரத்தமும் ஆண்களின் உடலில் 5.6 லீட்டர் இரத்தமும் காணப்படுகிறது. Male Female blood

எமது உடலிலுள்ள இரத்தக் குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக இணைத்தால் அது 600,000 மைல்கள் வரை நீண்டு செல்லும். இது உலகை இரு முறை சுற்றப் போதுமானது. world blood

இரத்தம் சிறந்த சாயப் பொருள். இதனைக் கொண்டு செவ்விந்தியர்கள் வர்ணம் தீட்டினார்கள். blood paint

ஒவ்வொரு 7 நாட்களும் நம் உடலிலுள்ள செங்குருதியில் அரைவாசி மாற்றீடு செய்யப்படுகிறது. red blood shell

ஒரு பின்ட் (pint) இரத்ததானம் 4 உயிர்களை காக்கவல்லது. blood donation

Older Posts »

Categories

Follow

Get every new post delivered to your Inbox.