இலையுதிரும்
காலம் போய்
இளவேனிற் காலம்
வந்தும்
இன்னுமேன்
நீ வரவில்லை?
தாடி வைத்து
சோகம் கொள்ள
தாடிகூட
முளைக்குதில்லை!
வட்ட வட்டமாய்
புகைவிட்டு
இருமித்திரிய
துணிச்சலும் வரவில்லை!
சோகப்பாட்டு படித்து
சோகமாய் நான் திரிய
குரல்கூட சரியில்லை!
கடிதமெழுதி
உனக்கு அனுப்ப
நாலெழுத்து
நான் படிக்கவில்லை!
நலமாவென்று
நானுன்னை
வந்து பார்க்க
காசுகூட கையிலில்லை!
இதற்கு மேலும்
ஏதும் சொல்ல
வெண்புறாவே…!
இத்தமிழனுக்கு
எதுவும் தெரியவில்லை!



நீங்க கவிதை எழுதுவீங்களா? சொல்லவேயில்லையே. நல்லாயிருக்கு!
By: ராமலக்ஷ்மி on May 6, 2012
at 3:19 pm
நன்றி! ஒரு பொழுதுபோக்கு முயற்சியே
By: Anton on May 6, 2012
at 8:41 pm
நல்லது. தொடர்ந்து எழுதுங்கள்!
By: ராமலக்ஷ்மி on May 7, 2012
at 8:59 am