சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபற்றிய போராளி.
அவர் கூறிய வார்த்தைகளில் சில……
எங்கெல்லாம் அடக்கப்பட்டோரின் இதய துடிப்புக்கள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
முழங்காலில் வாழ்வதைவிட நின்று கொண்டு இறப்பதே மேல்.
அநீதியை கண்டு உனக்கு ஆத்திரம் வருகிறதா? நீயும் என் தோழன்.
பெறுவதற்கு ஒன்றும் இல்லை. இழப்பதற்கு நிறைய இருக்கின்றன.
தன்னை கொல்ல வந்தவனிடம் சே குவரா கூறிய இறுதி வார்த்தைகள்.
எனக்குத் தெரியும் நீ என்னை கொல்ல வந்திருக்கிறாய் என்று. சுடு, கோழையே! உன்னால் ஒரு மனிதனை மாத்திரம்தான் கொல்ல முடியும்.




