எனக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் எனக்குத் தெரியும் என்ற இச்சொற்கள் கிரேக்க தத்துவஞானியான சோக்கிரடீஸ் (சாக்கிரடீஸ்) என்பவரால் கூறப்பட்டன. மிகச் சாதாரணமாகத் தெரியும் இக்கூற்றானது மெய்யியல் (Philosophy) உலகில் தனித்துவம் பெற்றதும் பிரசித்தம் பெற்றதுமாகும். மெய்யியல் உலகில் ஒர் சிந்தனை வழியை இக்கூற்று ஏற்படுத்தியது.
எமது சிந்தனை எமக்கு எல்லாம் தெரியும் என்ற விதத்திலேயே பெரும்பாலும் காணப்படுகிறது. ஆனால் மேற்கத்தேய மெய்யியலின் தோற்றுவிப்பாளர்களில் ஒருவரும், பல சிறந்த மெய்யிலாளர்களை உருவாக்கிய குருவும், மெய்யியலில் பல சிந்தனைகளின் சிற்பியுமான சோக்கிரடீஸ் (Socrates) மிகச் சாதாரணமாக தனக்கு எதுவுமே தெரியாது என்பதை ‘எனக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் எனக்குத் தெரியும்’ என்ற கூற்றின் மூலம் அறிதல் பற்றிய தத்துவத்திற்கு வழி உருவாக்குகிறார்.

சோக்கிரடீஸ் நஞ்சூட்டி கொல்லப்படும் காட்சி
நாம் எமக்கு தெரிந்தது என்பது எப்போதும் பிழைத்துவிடலாம். அப்போது எனக்கு தெரிந்தது என்பது கேள்விக் குறிக்குள்ளாகின்றது. சூரியக் குடும்பத்தில் கிரகங்கள் ஒன்பது என்பதுதான் எமது அறிவு. ஆனால், சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் இன்னும் சில இருப்பதாக சுட்டிக் காட்டியதும் எமது கிரகங்கள் பற்றிய அறிவு பிழையாகிவிடுகிறது. பூரணத்துவம் அற்ற அறிவின் தன்மையினாலேயே சோக்கிரடீஸ் அக்கூற்றைக் கூறக்கூடியவராக இருந்தார். அறிவு, தெரிதல், அறிந்து கொள்ளுதல் என்பன முடிவிலிகள்.
எமது பெருமை, அறிவாலிகளாக் காட்டிக் கொள்ளும் தன்மை என்பன நாம் அறிவை பெற்றுக் கொள்வதைத் தடுக்க வல்லன. மாறாக, எம்மைத் தாழ்த்தி அறிவிவை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவோமாயின் அங்கு முதிர்ச்சி ஏற்படும். அந்த முதிர்ச்சிதான் எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறக்கூடிய பக்குவத்தை பெற்றுத் தரவல்லது.
இணைப்பு: I know that I know nothing





நல்லதொரு பகிர்வு.
//அறிவு, தெரிதல், அறிந்து கொள்ளுதல் என்பன முடிவிலிகள்.//
உண்மைதான்.
இறுதிப் பத்தியில் சொல்லியிருப்பது சத்தியமான வார்த்தைகள்.
அடிக்கடி எழுதுங்கள்.
By: ராமலக்ஷ்மி on May 28, 2012
at 7:04 am
உற்சாகப்படுத்தலுக்கு நன்றிகள்!
By: Anton on May 28, 2012
at 7:26 am
Your are good writer ,carry on your writing
By: Uwe Herrmann on June 27, 2012
at 7:19 pm