health

ஒலி மாசு

வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது நல்ல காற்று, குடிதண்ணீர் இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்து விடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும். அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது.

மாசு நிறைந்த நீர் நிலம் காற்று ஆகியவற்றால் உடல்  ஆரோக்கியம் எப்படிக் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதனை உணராவிட்டால் உடல் உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஓலியற்ற வாழ்வை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில் ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாக இருக்கலாம்.

இதில் சப்தம், ஓசை, இரச்சல், கூச்சல், உருமல் ஆகிய விதங்களில் வெளிப்படும் ஒலிகளில் எது மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறதோ அது ஒலி மாசாக கருதப்படுகிறது.

ஆனால் பெரும்பாலானோர் சப்தம் நம்மை செய்யும் என்றே கருதுகின்றனர். இதில் இளைஞர்களின் விருப்பம் இவ் விடயத்தில் மோசமாக உள்ளது.

அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தில் மின்னனு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைர்கள்

ஆனால் ஒலி என்பது அமைதியாகக் கொல்லும் தன்மைடையது என்பதனை அவர்கள் உணரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயமாகும்

ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளை நம் செவி ஏற்றுக் கொண்ட பின்னர் அதை நாம் புரிந்து செயல்பட மூளை துணை புரிகிறது.

அதே நேரத்தில் செவியால் குறிப்பிட்ட அளவுக்கு மேலான அதிர்வுகளைத் தாங்க முடியாது. அதாவது 20 ஆயிரம் அதிர்வுகளுக்கு மேல் செவியால் கேட்க முடியாது. 120 டெசிபல் வரையான ஒலி அழுத்தங்களை மட்டுமே நன்றாக கேட்க முடியும். அதன் அளவு அதிகரித்தால் செவி பாதிக்கப்படும்.

ஆனால் நம் கிராமங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியானாலும் ஒலிபெருக்கி மூலம் அதிக ஒலியுடன் அதிக நேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதனை பார்க்கலாம்.

இதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தால் அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த ஒலி அளவை மீறியே பிறரிடம் பேசும் சூழலில் அவர்கள் செவித்திறன் பாதிக்கப்படும்.

மேலும் அந்தப்பகுதியில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் ஆகியவை ஒலி மாசினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

ஒலி மாசைக்கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின் போதும் வெளியாகும் ஒலியின் அளவு அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது

உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதிற்கு உட்பட்டோர்) ஒலி மாசு காரணமாக கேட்புத்திறன் இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பலரும் காது, இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத்தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

மேலும் 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சலால் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு செவிப்புலன் அயர்ச்சி ஏற்படுகிறது.

அமெரிக்காவில் ஒலி மாசினால் 10 சதவீதத்தினர் செவித்திறனை இழப்பதாகவும் ஏறத்தாழ 8 கோடி மக்கள் ஒலி மாசினால் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது

மேலும் 1000 பேருக்கு 35 பேர் எனும் வீதத்தில் காது இரைச்சல் நோயால் பாதிப்படைவதாகவும் நம் நாட்டில் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் 10 வீதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவீதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்க விடுவதில்லை குறைவாக ஒலியும் மூளையின் முக்கிய மையங்களை பாதித்து இயல்பான உறக்கத்தை குலைத்துவிடுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் அதிக ஒலியையோ எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர் இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும். எனவே இரைச்சலை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்

ஆனால் இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்பதை நம்மைச்சுற்றி நடைபெறும் நிகழ்வுகளில் பார்த்தால் புரிந்துவிடும் தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களிலிருந்து துக்க நிகழ்வுகள் வரை தொடரும் பட்டாசு சப்தம் நம் காதுகளைப் பதம் பார்க்கிறது.

கனரக வாகனங்கள், பஸ்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போதாது என்று இரு சக்கர வாகனங்களிலும் தங்கள் பங்குக்கு பலவகை வினோத ஒலி எழுப்பும் மின்னனு ஒலிப்பான்களைப் பொருத்தி பாதசாரிகளை மிரட்டி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.

This article has been copied from a national newspaper.

Advertisements

2 thoughts on “ஒலி மாசு

  1. அதிக நேரம் கைபேசியில் பேசுவது, பாட்டுக் கேட்பது – இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்…

    அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்… பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s