health

கையடக்கத்தொலைபேசி ஆபத்துக்கள்

 வெப்பம்:
கையடக்கத்தொலைபேசி வானலையை பெறும்போது வெப்பத்தை உமிழ்கிறது. பேசும்போது தலைக்கும் காதுக்கும் வெப்பம் கடத்தப்படும். இதனால் உடல் இழையம், கலங்களின் வெப்பம் மற்றும் உடல் வெப்பம் ஆகியவற்றை அதிகரிக்கும்.

கருத்தரித்தல், மலட்டுத்தன்மை:
அதிக கையடக்கத்தொலைபேசி பாவனை கருத்தரித்த பெண்களின் கருவை பாதிக்கவும், ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தவும் முடியும்.

மரபணு ஆபத்து:
கையடக்கத்தொலைபேசி மற்றும் கையடக்கத்தொலைபேசி கோபுரங்களின் கதிர்வீச்சு உடற்கலங்களின் அழுத்தத்தை அதிகரித்து மரபணுக்களை சிதைக்கும்(Free Radicals) நிலையை உருவாக்கும். இது பல நோய்கள் உருவாக வழிகளை ஏற்படுத்தும்.

தூக்கம்:
மூளையில் நெருக்கடி மற்றும் அதிக முன்னெச்சரிக்கை உணர்வைத் தூண்டும். இது வேலைகளின் முடிக்கும் திறன் மற்றும் தூக்கம் என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகள்:
மெலிதான மண்டையோடுகள் இருப்பதால் பாதிப்பின் விகிதம் கூடும். இது நினைவிழப்பு, நடத்தைப் பிரச்சனைகளுக்கு காரணமாகலாம்.

நீண்டகாலப் பாதிப்புக்கள்:
கடந்த 10 ஆண்டுகளில் மூளைப் புற்று நோய் ஏற்படும் விகிதம் 2 மடங்காகவும், காதுப் புற்றுநோய் 4 மடங்காகவும் அதிகரித்துள்ளது.

புற்றுநோய்:
2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வு 3 வித புற்றுநோய்கள் கையடக்கத்தொலைபேசி பாவனைகளினால் ஏற்படலாம் என கண்டறிந்துள்ளது.

ஆபத்தை எப்படிக் குறைக்கலாம்?

  • கையடக்கத்தொலைபேசி  பாவனையை குறைத்தல்.
  • அடைப்பான இடங்களில் பாவிப்பதை தவிர்த்தல்
  • குறைந்தது 5cm இடைவெளி தூரத்தை காதுக்கும் கையடக்கத் தொலைபேசிக்குமிடையில் பேணல்
  • வானொலி அலை கதிர்வீச்சு(RFR) பாதுகாப்பு கருவிகளைப் பாவித்தல்
  • குறைந்தளவு சக்திகளை வெளிவிடும் கையடக்கத்தொலைபேசிகளை பாவித்தல்
  • வேகமாக பிரயாணிக்கும்போது பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளல்
  • குறைந்தளவு சமிக்கை உள்ள நேரங்களில் பாவிப்பதை தவிர்த்தல்
  • உடலோடு கையடக்கத்தொலைபேசி இருப்பதை தவிர்த்தல்
  • காதுக் கருவிகள்(headsets) அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவற்றை தவிர்த்தல்
  • குழந்தைகள் பாவிப்பதை நிறுத்துதல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s