common

நாலந்த கெடிகே – நாலந்த சிலை மண்டபம்

Nalanda Gedige

A9 பிரதான வீதியில், தம்புள்ளை தெற்கு பக்கமாக 20கி.மி தூரத்தில், கிழக்கே 1கி.மி இல் அமைந்துள்ளது நாலந்த கெடிகே எனும் சிலை மண்டபம்.

இச்சிறிய கட்டிடம் இந்து கோயில் போன்று இந்து கோயில் கட்டிட அமைப்புக்களை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் உள்ளே பௌத்த, இந்து சிற்பங்கள் காணப்படுகின்றன. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இக்கட்டிடமானது தாந்திரிக் எனப்படும் பௌத்த சிற்ப வடிவமைப்பைக் கொண்டு பௌத்த – இந்து அடையாள சின்னமாகக் காணப்படுகின்றது.

8ம் – 10ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்காலப்பகுதியானது இலங்கைத் தீவில் குழப்பம் நிறைந்து காணப்பட்டது. சிங்கள முடியாட்சி சரிவைக் கண்டு கொண்டிருந்த போது, தென் இந்திய அரசர்கள் தங்கள் ஆட்சியை இத்தீவில் நிலை நாட்டிக் கொண்டிருந்தார்கள். எப்படியிருப்பினும், பௌத்த – இந்து கலாச்சாரத்தை இணைக்கும் ஓர் துணிச்சலான நடவடிக்கையகவே இதைப்பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கை நிலவளவை திணைக்களம், இக்கட்டிடம் அமைந்துள்ள இடம் இலங்கையின் நடுமைய பகுதியென உறுதிப்படுத்தியுள்ளது. மையப் புள்ளி 7.6699136N, 80.6458444E ஆகும்.

மேலதிக படங்களை பின்வரும் சுட்டியைப் பயன்படுத்தி பார்வையிடலாம். 
Nalanda Gedige, the centre point of Sri Lanka
 
 
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s