motivation

மனோபலம்

டெரெக் ரெட்மன்ட் பிரித்தானியாவைச் சேர்ந்த சிறந்த தட கள வீரர். 1992 இல் பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின்போது, அவருக்கு காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்திலேயே அவர் தரையில் மண்டியிட வேண்டியதாயிற்று.

அங்கிருந்த மருத்துவ குழாம் அவருக்கு உதவி செய்ய முனைந்த வேளை, அவர் அதைப் புறக்கணித்துவிட்டு உபாதையுடன் மீண்டும் ஓடத்துவங்கினார். அவ்வேளை அவருக்கு உதவியாக, அவரது தந்தை பாதுகாப்பு வலயத்தைத் தாண்டி வந்து தன் மகன் ஓடி முடிக்க உதவி செய்தார்.

போட்டியைக் கண்டுகளிக்க வந்திருந்த 65000 பேரும் எழுந்து ஆர்ப்பரித்து டெரெக்கைப் பாராட்டினார்கள். போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் இலக்கு வரை ஓடி முடிப்பது என்ற அவரின் மனோபலம் பலருடைய கண்களில கண்ணீரை வரவழைத்தது.

பின்நாட்களில். இவரின் செயற்பாடு விளம்பரங்களில் இடம் பிடிக்கலாயிற்று. ஒலிம்பிக் செயற்குழு தயாரித்த ‘மனிதத்தை கொண்டாடு’ என்ற காணொளியில் ‘மனோபலம்’ என்ற தலைப்பின் கீழ் இவரின் 1992 ஒலிம்பிக் பார்சிலோனா சம்பவம் இடம்பிடித்துள்ளது. அதில் பின்னனிக் குரல் இவ்வாறு வர்ணிக்கிறது:

வலிமை : பவுண்களால் அளவிடப்படுகிறது!

வேகம் : செக்கன்களால் அளவிடப்படுகிறது!!

மனோபலம் : உங்களால் இதை அளவிட முடியாது!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s