health

இதயத்தை பாதுகாப்போம்!

இதய நோய்களுக்கு காரணமே நமது கவலையீனமும் அறியாமையும்தான். அமெரிக்க ஆய்வு ஒன்று இதனைப் பட்டியலிட்டுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுத்தால் இருதய நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம். (இங்கு தரப்பட்டுள்ள புள்ளிவிரங்கள் அமெரிக்கர்களை மட்டும் உள்ளடக்கியது என்பதை நினைவிற் கொள்க.)

இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்

இலக்கு: நாடித் துடிப்பு 140க்கு குறைவாகவும் நாளத் துடிப்பு 90க்கு குறைவாகவும் இருத்தல்.

தடுக்கக் கூடிய பிரச்சனைகள்: 6.2 மில்லியன் மாரடைப்பு, 7 மில்லியன் பக்கவாதம்.

என்ன செய்யலாம்: ஒவ்வொரு வருடமும் இதய அழுத்தத்தை சரிபார்த்தல். உயர்வாக இருந்தால் உப்பை குறைத்தல். மேலதிக எடையை குறைத்தல். அதிக உடற்பயிற்சி செய்தல். மருந்து தேவைப்பட்டால் மருத்துவரை அணுகுதல்.

கொலஸ்ரோல் (கொழுப்பு) அளவைக் கட்டுப்படுத்தல்

இலக்கு: கொலஸ்ரோல் அளவு 160க்கு கீழ் இருந்தால் மாரடைப்பு குறைவாக இருக்கும். 130 இருந்தால் இடைப்பட்ட மாரடைப்பு தாக்கத்திற்கும் 100 ஆக இருந்தால் அபாயகரமான மாரடைப்பு தாக்கத்திற்கும் உள்ளாக நேரிரும்.

தடுக்கக் கூடிய பிரச்சனைகள்: 9.6 மில்லியன் மாரடைப்பு, 3 மில்லியன் பக்கவாதம்.

என்ன செய்யலாம்: 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இதய குழாயுடன் தொடர்புபட்ட உயர் இரத்த போன்ற நோய்களுக்கு காரணிகளாக நோக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு 5 வருடமும் பரிசோதிப்பது நன்று. உங்கள் கொலஸ்ரோல் அளவு கூடுதலாக இருந்தால், உடல் பருமனை குறைக்க முயல வேண்டும். அதிக உடற்பயிற்சி செய்தல், புகைத்தலை நிறுத்துதல், மருந்து தேவைப்பட்டால் மருத்துவரை அணுகுதல், இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் என்பன பயனுள்ள நடவடிக்கைகளாக அமையும்.

மேலதிக எடையைக் குறைத்தல்

இலக்கு: உடல் அளவு சுட்டி 30க்கும் 25க்கும் இடையில் இருத்தல்.

தடுக்கக் கூடிய பிரச்சனைகள்: 7.1 மில்லியன் மாரடைப்பு, 1.1 மில்லியன் பக்கவாதம்.

என்ன செய்யலாம்: உடல் அளவு சுட்டியை அளவிட, உங்கள் உடல் நிறையை (பவுண்களில்) 703ஆல் பெருக்கி உங்கள் உயரத்தை சதுர அங்குலத்தினால் பிரிக்க வேண்டும். இலகுவாக கணிப்பிட வேண்டுமானால் ஆண்களின் இடையளவு 40 அங்குலத்திற்கு குறைவாகவும் பெண்களின் இடையளவு 35 அங்குலத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

இரத்தத்திலுள்ள சர்க்கரையின் (சீனி) அளவை கட்டுப்படுத்தல்

இலக்கு: இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவு 110 ஆக இருந்தால் பிரச்சனையில்லை. 100க்கு கீழ் இருப்பது நன்று.

தடுக்கக் கூடிய பிரச்சனைகள்: 4.8 மில்லியன் மாரடைப்பு, 0.6 மில்லியன் பக்கவாதம்.

புகைத்தலை நிறுத்துதல்

என்ன செய்யலாம்: புகைத்தலை விட்டு விலகுதல்

இலக்கு: விட்டுவிடுதல் தடுக்கக் கூடிய பிரச்சனைகள்: 3.3 மில்லியன் மாரடைப்பு, 1.4 மில்லியன் பக்கவாதம்.

என்ன செய்யலாம்: மருத்துவரை அனுகி புகைத்தல் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் புகைத்தலால் ஏற்படக்கூடிய நோய்களை இருக்கின்றனவா என பரிசோதித்தல்.

குறைந்தளவு அஸ்பிரின் பாவனை

இலக்கு: குறைந்தளவு (81 மில்லி கிராம்) அஸ்பிரினை உட் கொள்ளல்.

தடுக்கக் கூடிய பிரச்சனைகள்: 3.4 மில்லியன் மாரடைப்பு, 0.3 மில்லியன் பக்கவாதம்.

என்ன செய்யலாம்: மருத்துவரை அனுகி உங்களுக்கு உள்ள இதயம் மற்றும் வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் பற்றி பேசுங்கள். அஸ்பிரின் பாவனையினால் ஏற்படும் உடல் பருமனை அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s