உண்மைக் கதை

உண்மைக் கதை – இது பயனுள்ளது

தனது நீண்ட நாள் நண்பன் யுத்தக் களத்தில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்த உலக மகா யுத்தம் – 1 இல் பங்கு பற்றிய படைவீரனின் இதயம் திகிலால் சூழ்ந்து கொண்டது. அந்தப் படைவீரன், வீழ்ந்துகிடக்கும் தன் நண்பனை எடுத்துக் கொண்டுவர தன் மேலதிகாரியிடம் அனுமதி கேட்டான்.soldier carrying fallen comrade

‘நீ போகலாம்’ என மறுமொழியளித்த மேலதிகாரி ‘ஆனால், இது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

உன் நண்பன் ஏறக்குறைய செத்துவிட்டான். நீ கூட அங்கே போவதால் உன் உயிரைவிடலாம்.’

மேலதிகாரி சொற்கள் அந்தப் படைவீரனுக்கு ஓர் விடயமாகப்படவில்லை அவன் சென்றுவிட்டான்.

அற்புதமாக, அவன் நண்பன் இருந்த இடத்திற்கு போய் சேர்ந்துவிட்டான். தோளில் தன் நண்பனை தூக்கிப்போட்டவாறு தன் படைப் பிரிவின் பதுங்கு குழியை வந்தடைந்தான். மேலதிகாரி, காயப்பட்டிருந்த வீரனை பரிசோதித்துவிட்டு, பரிவோடு அந்தப் படைவீரனை பார்த்தார்.

‘நான் உனக்கு முன்பே கூறினேன் இது பயனுள்ளதாக இருக்காதென்று’ என்று கூறிய அவர் ‘உன் நண்பனும் இறந்துவிட்டான் நீயும் மிகமிக மோசமாக காயப்பட்டிருக்கிறாய்.’

‘இது பயனுள்ளது, ஐயா’, பதிலளித்தான் படைவீரன்.

‘பயனுள்ளது என்பதை நீ எப்படி அர்த்தப்படுத்துகிறாய்?’ எனக் கேட்ட அந்த அதிகாரி ‘உன் நண்பனோ இறந்துவிட்டான்’ என்றார்.

‘ஆம் ஐயா’ பதிலளித்த படைவீரன்…

‘ஆனால் இது பயனுள்ளது ஏனென்றால், நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது அவன் உயிருடன் இருந்தான். ‘ஜிம்… நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்.’ என்ற என் நண்பனின் வார்த்தைகள் எனக்குத் திருப்பியானவை.’

வாழ்க்கையில் பல தடவைகளில், நாம் பார்க்கும் பார்வையில்தான் பயனுள்ளது என்பதும் பயனற்றது என்பதும் தங்கியுள்ளது. உன்னிடமுள்ள எல்லா உற்சாகத்தையும் எடுத்துக் கொண்டு உன் இதயம் உனக்குச் சொல்வதைச் செய். பின்பு உன் வாழ்நாளில் அதைச் செய்யவில்லையே என வருந்தாமலிருக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s