common · history

காதலர் தினம்

காதலர் தினம் (காதலர் நாள்), வலன்டைன் தினம் (வேலன்டைன் நாள்), வலன்டைன் நாள் (வேலன்டைன் நாள்) என தமிழிலும் ஆங்கிலத்தில் Valentine’s Day (Lovers’ Day) என அழைக்கப்படும் நாள் இன்று பலருக்கும் பல அர்த்தம் கொடுப்பதாக இருந்தாலும், அது தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டது.

Book Heart

புனித வலன்டைன் தினம் (காதலர் தினம்) பெப்ரவரி 14 அன்று இரத்த சாட்சியாக மரித்த கிறிஸ்தவ பாதிரியார் புனித வலன்டைன் கௌரவிக்கும் முகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் கி.பி. 496இல் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 1969 இல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

Green Heart

இந்நாளில் காதலை, அன்பை தெரிவித்துக் கொள்வது வழக்கமான ஒன்று. அதற்காக வாழ்த்து அட்டைகள், மலர்கள், இனிப்புகள் போன்றவை பரிமாறப்படுகிறன. இவற்றில் இதய வடிவ பொருட்கள், ஜோடிப் புறாச் சின்னம், மன்மதன் உருவங்கள், சிவப்பு ரோஜா என்பன குறிப்பிடத்தக்கவை.

Metal Heart

1784 ம் ஆண்டில் உருவாகிய காதலர் தினம் கவிதை:

ரோஜா சிவப்பு, வயலட் மலர் நீலம்
தேன் இனிமை, நீயும் இனிமை
நீயே என் காதல், நானோ உன்னுடையவன்
என் வலன்டைனாக உன்னை வரைந்தேன்
அனேக பிரயாசத்தின் பின் உன்னை வரைந்தேன்
அதிஸ்டம் சொல்லியது இது நீயோகவே இருக்க வேண்டுமென்று…

Smoking Heart

இது மேற்கத்திய கொண்டாட்டமாக கருதப்படுகின்றபோதும் உலகில் பல இடங்களில் இத்தினம் கொண்டாப்படுகிறது. இது சுதேச (கீழைத்தேய) பண்பாட்டுக்கு பொருத்தமற்றது என்றும் இது ஒரு வணிக நோக்கமுடையது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையான அன்பிற்கோ அல்லது காதலுக்கோ குறிப்பிட்ட நாள் மாத்திரமல்ல, ஒவ்வொரு நாளுமே காதலர் தினமே என்பதே யதார்த்தம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s