history · motivation

வந்து எடுத்துக் கொள்!

வீரமும், துணிச்சலும், தலைமைத்துவமும், தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு தலைவனின் பதில்தான் “அவற்றை வந்து எடுத்துக் கொள்”.

லியோனிடாஸ் I (Leonidas I): கிரேக்க நகர அரசுகளில் ஒன்றான ஸ்பாட்டவின் (Sparta) அரசன். ஸ்பாட்டாவும் ஸ்பாட்டா படைகளும் வீரத்திற்குப் புகழ்பெற்றவை. எதிரிகளைக் கண்டு அஞ்சாது உயிர்போகும் வரை போராடும் வீரம் ஸ்பாட்டா நாட்டினதும், ஸ்பாட்டாப் படைகளினதும் மையம். வரலாற்று ஆய்வாளர்களின் ஆச்சரியமும், போரியல் வல்லுனர்களின் வியப்பும் ஸ்பாட்டா வீரர்கள் உலகுக்கு விட்டுச் சென்ற விடுகதைகள்.

come and get them

ஆனால், அரசன் லியோனிடாஸ் “அவற்றை வந்து எடுத்துக் கொள்” (“Come and get them“) என்று கூறிய சம்பவம், வெறுமனே கூற்றாகாமல் சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது. பாரசீகப் படைகள் 100,000 க்கும் 300,000 இடைப்பட்ட அளவு வீரர்களுடன் (சில தகவல்கள் ஒரு மில்லியன் என்கிறது) கிரேக்கம் மீது படையெடுக்கிறது. வெறும் 300 ஸ்பாட்டன்களையும், 1100 க்கு மேற்பட்ட கிரேக்க வீரர்களையும் மட்டும் வைத்துக் கொண்டு பாரிய படையை, அதுவும் அக்கால வல்லரசுப் படைகளை எதிர்கொள்வதென்பது தற்கொலைக்குச் சமம். ஆனாலும் எதிர்த்தனர்.

முடிவு. ஏறக்குறைய எல்லோருமே தேமோபைலேச் சமரில் வீரமரணமடைந்தனர். கிரேக்கத்தின் தேமோபைலே எனும் இடத்தில் சங்கமமாயினர்.

பாரசீகப் படை கிரேக்க வீரர்களை சரணடையுமாறு உத்தரவிட்டது. அதன் முதல் செயற்பாடாக ஆயுதங்களை ஒப்படைக்குமாறு நிபந்தனை வழங்கப்பட்டது. அதற்குப் பதிலாக லியோனிடாஸ் “அவற்றை வந்து எடுத்துக் கொள்” என தம்மைவிட பலமடங்கான, பலமுள்ள எதிரிகளுக்கு வேடிக்கையாகப் பதிலளித்தார்.

வெற்றி பெற்றது பாரசீகர்கள்தான். ஆனால், சரித்திரத்தில் கதாநாயகர்களாகப் பார்க்கப்படுவது லியோனிடாசும் 300 ஸ்பாட்டன்களும்தான். ஆங்கிலத்தில் “300” என்ற பெயரிலும் தமிழில் “300 பருத்தி வீரர்கள்” என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் அச்சம்பவத்திற்கு ஒரு சிறு உதாரணம்.

போர், வீரம், துணிச்சல், தலைமைத்துவம், தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு எல்லாமே சிறப்பானவைதான். இதுதான் தேமோபைலேச் சமர் பற்றி பேசப்படும் விடயங்கள். அதற்கப்பால், அரசனிடம் உள்ள தலைமைத்துவம் மிகவும் சிறப்பானது. மரணம் நிச்சயம் எனத் தெரிந்தும் ஒருசில வீரர்களுடன் பேராபத்தை எதிர்த்த தலைமைத்துவ வழிகாட்டல் மிகச் சிறப்பானது. பல்லாயிரக்கணக்கான ஸ்பாட்டா வீரர்கள் இருக்கும்போது 300 வீரர்களுடன் போருக்குப் புறப்பட்டது தலைமைத்துவத்தின் உச்சம்.

தலைவன் என்பவன் முன்னே, முதலில் செல்பவன்.

2 thoughts on “வந்து எடுத்துக் கொள்!

  1. எனக்கு இந்த படம் மிகவும் பிடித்தமனா ஒன்று இதுதான் எங்கள் ஸ்பாட்டான்களின் சட்டம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s