motivation

கழுகு: கழுகும் அதன் 7 கொள்கைகளும்

கழுகு (Eagle) ஓர் அற்புதமான பறவை. அதற்குச் சிறப்பான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் உள்ளன. உலக நாடுகளின் சின்னங்கள் முதல் வியாபாரப் பொருட்கள் பலவற்றை அலங்கரிப்பதற்குக் காரணம் அதன் சிறப்பான பண்புகள் ஆகும். கழுகிடம் காணப்படும் ஏழு குணாம்சங்கள் உயர்வான மனித வாழ்வை விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.

கழுகு

கொள்கை 1:
கழுகுகள் தனியாக, உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்கது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது.

கழுகுகள் கழுகுகளுடன் மட்டும் பறக்கும்!

கொள்கை 2:
கழுகுகள் கூர்மையான பார்வை உடையன. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும். தடைகள் வந்தாலும், அது தன் தன் கவனத்தை திசை திருப்பாது, தன் பார்வையை இரையின்மேல் வைத்திருக்கும்.

தரிசனமும் தடைகளின்போது சிதறாத கவனமும் வெற்றியடையும்!

கொள்கை 3:
பிணந்தின்னிக் கழுகு போல் கழுகு அழுகியவை மற்றும் இறந்தவற்றை உண்ணாது. அது புதிதான இரையினையே உண்ணும்.

எதை உண்பது? எதைத் தெரிவது? எதை விலக்குவது? என்பதில் கழுகுகள் சரியான தெரிவை எடுக்கும்!

கொள்கை 4:
கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களின் மேலாக உயர்த்தப்படுகின்றன. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. அதே நேரம், மற்றப் பறவைகள் மரக்கிளைகளில் ஒளிந்து கொள்ளும்.

வாழ் நாட்களில் ஏற்படும் புயல்கள் போன்ற சவால்கள், உயரப் பறக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களாகவும், நன்மையாகவும் மாற்றிக் கொள்ளப்படுகின்றன!

கொள்கை 5:
கழுகு பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அது ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு அவதானித்துக் கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்ப்பிக்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணித்தியாலங்களுக்கு பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும்.

உறவை ஏற்படுத்திக் கொள்ள முன் பொறுப்புணர்வு சோதனைக்கு உள்ளாக்கபடுகின்றது!

கொள்கை 6:
முட்டையிடத் தயாரானதும், ஆணும் பெண்ணும் மலையின் உச்சியிலுள்ள, ஏனைய உயிரிணங்கள் இலகுவில் வந்தடைய முடியாத இடத்தினைத் தேர்வு செய்யும். ஆண் முட்களைக் கொண்டு வந்து பாறைப் பிளவில் கூட்டினை அமைக்க ஆரம்பிக்கும். அதன் பின் குச்சிகளையும், அதன் மேல் முட்களையும் வைத்துக் கட்டும். அதன்மேல் மிருதுவான புற்களை அடுக்கி முதலாவது அடுக்கினை முடிக்கும். அதன் பின் முட்களைப் பரப்பி, அதன் மேல் புற்களைப் பரப்பும். அதற்கு மேலாக தன் இறகுகளைப் பரப்பி, கூட்டினைக் கட்டி முடித்துவிடும். கூட்டின் வெளியேயுள்ள முட்கள் வெளியேயிருந்து எதுவும் கூட்டிற்குள் வருவதைத் தடுக்கும். பெண் கழுகு முட்டையிட்டு பாதுகாக்க, ஆண் கழுகு இரையை வேட்டையாடும்.

குச்சுகளைப் பயிற்றுவிக்க பெண் கழுகு அவற்றை கூட்டிற்கு வெளியே எடுத்துவிடும். பயந்த குஞ்சுகள் கூட்டிற்குள் தாவி வந்துவிடும். ஆகவே, குஞ்சுகளை கூட்டிற்கு வெளியே எடுத்துவிட்டதும், கூட்டிலுள்ள இறகுகளை வெளியேற்றி முட்களுடன் கூட்டை விட்டுவிடும். பயந்த குஞ்சுகள் மீண்டும் கூட்டிலுள் தாவியதும், அங்குள்ள முட்கள் அவற்றைக் குத்திவிடும். இதனால் குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறும்.

அடுத்து, மலை உச்சியிலிருந்து குஞ்சுகளை தாய்க் கழுகு கீழே தள்ளிவிடும். பயத்தால் அவை கீச்சிட்டு, கீழே விழுமுன் ஆண் கழுகு அவற்றைப் பிடித்து தன் மேல் வைத்துக் கொண்டு மலை உச்சிற்கு கொண்டு வரும். குச்சுகள் இறக்கை அடிக்கத் தொடங்கும் வரை, இவ்வாறு நடைபெறும்.

குடும்பம் இருவரின் பங்குபற்றலாலும் வெற்றி பெறும். முட்கள் குத்துப்போது, வாழ்வு அனுபவப்படாமல், முன்னேறாமல், கற்றுக் கொள்ளமல் அதிக வசதியாக இடத்தில் இருப்பதை உணர்த்துகின்றது. வாழ்விலுள்ள முட்கள் வளர வேண்டும், கூட்டை விட்டு வெளியேறி வாழ வேண்டும் என்பதை கற்பிக்கின்றன.

உன்னை நேசிப்பவர்கள் உன்னை சோம்பலினால் நலிவுற விடமாட்டார்கள். அவர்களின் செயல் கூடாத செயலாகத் தெரிந்தாலும் நம் வளர்ச்சி, செழிப்பு எனும் நன்மைக்காளுக்காக அவர்கள் நம்மை கடினமான பாதையில் தள்ளுவார்கள்!

கொள்கை 6:
ஓரு கழுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டுள்ளதாக உணர்ந்ததும், மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அந்த மறைவான இடத்தில் புது இறகுகள் முளைக்கும் வரை தங்கியிருந்து, பின் வெளியே வரும்.

சுமையான, வாழ்க்கைக்குத் தேவையற்ற பழைய விடயங்கள், பழக்க வழக்கங்கள் இடையிடையே நீக்கப்பட வேண்டும்!

ஆங்கில மூலம்: கிவ்வி லயின்

கழுகு பற்றிய உயிரியல் விபரம்:
Kingdom (இராச்சியம்): Animalia (விலங்கு)
Phylum (தொகுதி): Chordata (முகுகுநாணி)
Class (வகுப்பு): Aves (பறவை)
Advertisements

8 thoughts on “கழுகு: கழுகும் அதன் 7 கொள்கைகளும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s