common

கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் (முழுப்பெயர்: கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ், Karl Heinrich Marx)  5 மே 1818 அன்று ஜேர்மனியில் பிறந்து, தனது 64வது வயதில் 14 மார்ச் 1883 அன்று இலண்டனில் காலமானார். தன் வாழ்நாளில் மெய்யியலாளர், பொருளாதார வல்லுனர், சமூகவியலாளர், வரலாற்றாளர், பத்திரிக்கை எழுத்தாளர், புரட்சிகர பொதுவுடைமையாளர் என பல்துறை விற்பனராகத் திகழ்ந்த இவர் அரசியல், பொருளாதாரம், மெய்யியல், பொதுவுடைமைவாதம், வரலாறு, வகுப்புப் போராட்டம், இயற்கை அறிவியல்கள் (இயற்கை விஞ்ஞானங்கள்) ஆகிய துறைகளுக்கு தன் அறிவார்ந்த கருத்துக்கள் மூலம் வளம் சேர்த்தார். மார்க்சிச வாதம் (மார்க்சிசம்), பொதுவுடைமை வாதம் / பொதுவுடைமை (கம்யூனிசம்), சமூகவுடைமை /சமவுடைமை (சோசலிசம்) மற்றும் பொருள்முதல் வாதம் என்பன இவரின் முக்கிய கொள்கைகளாகும்.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் கருத்துக்களும் கொள்கைகளும் அன்று முதல் இன்று வரை மனித சமூகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவரின் அற்புதமான சிந்தனையிலிருந்து பிறந்த சிந்தனைத் துளிகளில் சில பின்வருமாறு:

 • எல்லாவற்றையும் கேள்வி கேள்.
 • தலைவணங்குவதையும் கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன்.
 • கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது கெட்ட கனவாகக் கிடக்கிறது.
 • எல்லா பெரிய வரலாற்று காரணிகளும் புகழ்பெற்ற நிகழ்வுகளும் இரண்டு விதமாக இருந்திருக்கும். முதல் முறை அவல நிகழ்வு, இரண்டாவது முறை கேலிக்கூத்து.
 • மெய்யியலாளர்கள் (தத்துவ ஞானிகள்) உலகத்தைப் பற்றி பல வழிகளில் வியாக்கியானம் மாத்திரமே செய்தார்கள். அதற்கான நோக்கம் உலகை மாற்றுவதுதான்.
 • மிக அதிகளவான பயனுள்ள பொருட்களின் உற்பத்தி அதிகளவான தேவையற்ற மக்களையே உருவாக்கும்.
 • பெண்பாலின் சமுதாய நிலையினால் சமுதாய வளர்ச்சியானது அளவிடப்பட முடியும்.
 • நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ்செல்வமாகும்.
 • மன துன்பத்திற்கு மாற்று மருந்து உடல் ரீதியான நோவு மாத்திரமே.
 • காரணம் எப்போதும் இருக்கிறது, ஆனால் எப்போதும் பொருத்தமான வடிவில் அல்ல.
 • மிகப்பெரிய தோல்வியை விடவும் மிகப்பெரும் வெற்றிக்கே நாம் மிகவும் அஞ்ச வேண்டும்.
 • புரட்சிகள் வரலாற்றினுடைய இடம்விட்டு இடம்செல்லும் இயந்திரங்களே.
 • உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம்.
 • சமயம் என்பது நெருக்கப்பட்ட உயிரின் பெருமூச்சும், இதயமற்ற உலகின் இதயமும், ஆன்மா அற்ற நிலையின் ஆன்மாவும் ஆகும். இது மக்களுக்கு அபின் (போதை) போன்றது.
 • பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது, அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகிவிடும்.
 • சமயம் என்பது புரிந்து கொள்ளமுடியாத சம்பவங்களுடன் பங்கு கொள்ளும் மனித மனத்தின் இயலாமையாகும்.
 • மனிதன் என்பதற்கு மேலான எந்தக் பெருமையும் இல்லை.
 • நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
 • உங்களால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறீர்களோ, அதைத் தீவிரமாகச் செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். அதுவே வெற்றி பெற உகந்த வழி.
 • நான் ஒன்றுமில்லை, ஆனால் எல்லாமே நானாக இருக்க வேண்டும்.
 • மக்கள் தங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தேர்ந்து கொண்ட சூழ்நிலையின் கீழ் இருக்க வேண்டுமென்ற தேவையில்லை.
 • மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s